அசிதிசி ஊடகப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது
ஊடகத் துறை அமைச்சு ஒழுங்கு செய்துள்ள அசிதிசி ஊடகப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்த்தன நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார். அமைச்சின் செயலாளர் அனுஷ்ச பல்பிற்ற உட்பட பல்வேறு அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளார்கள். இலத்திரனியல், அச்சு, இணைய ஊடகங்களில் மூன்று வருடங்களுக்கு மேலாக நிரந்தரமாக அல்லது பகுதிநேர அடிப்படையில் பணியாற்றும் தொழில்சார் ஊடகவிலாளர்களுக்கு இந்தப் புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள முடியும். 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையை வைத்துள்ள ஊடகவியலாளர்களுக்கு இந்த புலமைப்பரிசில் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும்.