Home » அடுத்த மாதம் இந்தியாவில் இருந்து நான்கு எரிபொருள்களை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு

அடுத்த மாதம் இந்தியாவில் இருந்து நான்கு எரிபொருள்களை ஏற்றிய கப்பல் இலங்கைக்கு

Source
Share Button

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக நான்கு எரிபொருள் தாங்கிய கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் பெற்றோலிய, இயற்கைவாயு, வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சர் ஹர்திப் சிங் சூரிக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றது. இதன் போதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துiயாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை விநியோகிப்பதற்கு இந்திய அமைச்சர் சாதகமான பதிலை வழங்கினார். இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்கள் மற்றும் பெற்றோலை ஏற்றிய இரண்டு கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது.
அதில் ஒரு டீசலை ஏற்றிய கப்பலை இலங்கைக்கு விரைவாக அனுப்புவதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், டீசல் கப்பல் இலங்கைக்கு வர மேலும் பத்து அல்லது 12 நாட்கள் செல்லும். இதனிடையே, பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கம், சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் பட்சத்தில், சிங்கப்பூரிலிருந்து பெற்றோலை ஏற்றிய கப்பல் நாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image