அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பதில் அரசாங்கம் கவனம்

அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 ஆகும். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் அனைத்து தரத்திற்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
