அடைமழை பெய்து வருவதனால் எச்சரிக்ககைக்குரிய நிலை ஏற்படுமாயின், அதுபற்றி தெளிவூட்டுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம அறிவிப்பு

நாட்டின் சில பிரதேசங்களில்இ அடைமழை பெய்துவருவதனால் எச்சரிக்ககைக்குரிய நிலை எதிர்வரும் சில மணி நேரத்துள் ஏற்படுமாயின்இ அதுபற்றி அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராக இருப்பதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளளார்.அனர்த்தம் ஏற்படுமாயின் அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக முப்படையினரதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புப் பெறப்படும். நாட்டின் சில பிரதேசங்களில் சுமார்100 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. கொழும்பின் சில பிரதேசங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் நீரேந்து பிரதேசங்களில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. நீரேந்து பிரதேசங்களிலும். மத்திய மலை நாட்டிலும் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ வவுனியாஇ ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தினால் 11 மாடுகள் நேற்று உயிரிழந்திருக்கின்றன. அத்துடன் வவுனியா மாமடு பகுதியில் கடந்த வெசள்ளிக்கிழமை மின்னல் தாக்கத்திற்கு உட்பட்ட பெண்;ணொருவர் உயிரிழந்துள்ளார்.
