அட்டமஸ்தானாதிபதியான சங்கைக்குரிய கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாச தேரரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் இன்று மாலை இடம்பெற்றது

அனுராதபுர அட்டமஸ்தானாதிபதியான வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான, பிரதான சங்க நாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி பல்லேகம ஸ்ரீநிவாஷ தேரரின் இறுதிக்கிரியை அரச மரியாதையுடன் இன்று மாலை அனுராதபுரம் புனித பூமியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமயத்தலைவர்கள் பங்கேற்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினோஷ் குனவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட ஏராளமானோர் இறுதிக்கிரிகையில் பங்கேற்றனர்.
