அணு சக்தி பயன்பாட்டில் மின் உற்பத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு ஒன்பது குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பந்துல குனவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த குழுக்களினால் தயாரிக்கப்படும் அறிக்கைக்கு அமைய, சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் சிபாரிசுகளுக்கு உட்பட்டு அணு சக்தியிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்க இயலும் என்றும் அமைச்சர் கூறினார். இதற்கான உடன்படிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது இலங்கையின் எரிசக்தித்துறையில் யுக மாற்றததிற்கு அடிகோலும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.