அதிக வெப்பமான காலநிலை நிலவுவதனால் அதிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர்கள் மிகுந்த கரிசனை காட்ட வேண்டும் என்று கொழும்பு ரிட்ஜ்;வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நீராகாரங்களை அதிகளவில் அருந்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக உஷ்ணம் நிலவுவதனால் தோல் நோய்கள் பரவுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்தார். நோய் அறிகுறிகள் தென்படுமிடத்து வைத்தியரின் ஆலோசனையைப் பெறுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.