அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், பொருட்களின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது. ரூபாயின் பெறுமதி அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் வேகமாக குறைவடையும். பாஸ்மதி அரிசியை தவிர, ஏனைய அரிசி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்போகத்தின் அறுவடை வெற்றியளித்துள்ளது. எதிர்வரும் பருவத்திலும் வெற்றிகரமான அறுவடை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில் நாடு அரிசியில் தன்னிறைவடையும் எனத் தெரிவித்த அமைச்சர், இவ்வருடம் அரிசி இறக்குமதி செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.