அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை

.
இந்த வருடத்திற்குத் தேவையான அரிசிக் கையிருப்பு நாட்டில் இருப்பதாக அமைச்சர் நலீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை சிறுபோகத்தில் சிறந்த நெல் அறுவடை கிடைக்கப்பெறும். எதிர்வரும் பெரும்போகத்திலும் சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்தார். அவ்வாறான பொருட்கள் தற்சமயம் சதோச விற்பனை நிலையத்தின் ஊடாக விநியோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
