அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சகல தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
