அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சில கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்திற்கருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழுமபு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று பகல் பேரணியை நடத்துவதற்கு ஏற்கனவே திடட்மிடப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்றம் இதற்கெதிரான தடையுத்தரவினை பிறப்பித்திருந்தது. இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில் கூடியுள்ளனர். இதன் காரணமாக கொழும்பில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்hட்டக்காரர்களை கலைப்பதற்கு கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு முன்னால் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகங்களை மேற்கொண்டனர்.