Home » அன்று இன விடுதலைக்கு; இன்றோ… போதைப்பொருள் விடுதலைக்கு!

அன்று இன விடுதலைக்கு; இன்றோ… போதைப்பொருள் விடுதலைக்கு!

Source
ந.லோகதயாளன் –

இன விடுதலை வேண்டி போராடிய இனம் இன்று போதையில் இருந்து மீளப் போராடும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் 12 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 ஆயிரம் கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாயின் பிடிபடாமல் கொண்டு செல்லப்பட்டது எவ்வளவு என்ற ஆச்சரியக் கேள்வி மக்களால்  எழுப்பப்படுகின்றது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள சூழலில், கடந்த 3 மாதங்களில் யாழில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 141 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதான தகவலும் வெளிவந்துள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் பின்பு விடுதலைச் சிந்தனையே ஏற்படக் கூடாது என்பதற்காகவே அந்த எண்ணத்தை மழுங்கடிக்கும் விதத்தில் இந்தப் போதைப் பொருள்கள் நாட்டிற்குள் உலாவ விடப்பட்டது. இதற்கு எடுத்துக் காட்டாக போர் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் பாவனை என்ற விடயமே அறியப்படாத ஒன்று எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சி்.சிறிதரன் தெரிவிக்கின்றார். 

இதேநேரம் 2011 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் அரச படைகளால் கைப்பற்றப்ப போதைப் பொருட்களின் அளவே தலை சுற்றும் நிலையில் அகப்படாமல் எடுத்துச் செல்லப்பட்டவை எவ்வளவு என்ற இமாலய கேள்வியும் எழுகின்றது.

ஏனெனில் கடந்த 12 ஆண்டுகளில் கேரள கஞ்சா மட்டும் 27 ஆயிரத்து 357 கிலோ அரச படைகளிடம. அகப்பட்டுள்ள அதே நேரம் 4 ஆயிரத்து 152 கிலோ ஹரோயினும், ஆயிரத்து 81 கிலோ ஐஸ் போதைப் பொருளும் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட போது அகப்பட்டுள்ளன என கடற்படையினர் உறுதி செய்கின்றனர்.

இவற்றிற்கு மேலதிகமாக தற்போது இலங்கையிலும் கஞ்சா பயிரப்படும் சமயம் அவை கைப்பற்றப்பட்ட வகையில் அதில் 11 ஆயிரத்து 26 கிலோ அகப்பட்டமை உறுதி செய்யப்படுகின்றது.

அவ்வாறானால் போரின் பின்பு 2011 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 43 ஆயிரத்து 616 கிலோ போதைப் பொருள் இலங்கையில் பிடிபட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வாறு கடத்தி வரப்படும் போதைப் பொருள்களில் மிக அதிகமானவை இந்தியாவில் இருந்து கடத்தி வரப்படுகின்றன.   என  நம்பப்படுகின்ற நிலைமையில் இந்தியக் கரையோர காவல் படையினரில் இருந்து பொலிஸார் வரையில் என்ன செய்கின்றனர் என்ற கேள்வி இந்தியாவில் ஏன் எழவில்லை என்பது ஆச்சரியமாகவே உள்ளது. அதேநேரம் இலங்கை கடற்படையினரின் மிதமிஞ்சிய  போர் அனுபவத்தின் மத்தியிலும் அவர்களையும் தாண்டி எவ்வாறு உள்ளே ைவை எடுத்து வரப்படுகின்றன என்ற கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை.

இதேநேரம் இந்த கேரளாக் கஞ்சா தற்போது இந்தியாவில் கிலோ ஒன்று 20 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை மட்டுமே விலையாகுவதாக தெரிவிக்கப்படுவதனால் இது இலங்கை நாணயத்தில் ஒரு லட்சம் ரூபா முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாவினை எட்டுகின்றபோதும் இலங்கையிலே ஒரு கிலோ கஞ்சாவானது தற்போது 3 லட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில் எஞ்சிய பணம் கடத்தல்காரரின் வருமானம் என்கின்றனர். 

இதேநேரம் இலங்கைக்கு எடுத்து வரப்படும் கஞ்சா  முழுமையாக இலங்கையரின் பாவனைக்கு அன்றி அவை ஒன்று சேர்க்கப்பட்டு பொதி மூலம் வேறு நாடுகளிற்கும் கடத்தப்படுவதாக தற்போது கண்டறியப்படுவதனால் இவை வெறுமனே இலங்கை – இந்திய கடத்தலைத் தாண்டி  சர்வதேச வலையமைப்பாகவே இருக்கும் என பொலிஸார் கருதுகின்றனர். 

இன்று குடாநாட்டில் முதியவர்களிடம் இருந்து இளையோரிடம் தாவிய போதைப் பழக்கம் சிறுவர்களிடமும் சென்று விடுமோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் தொற்றிவிட்டது. இவ்வாறெல்லாம் சகல தரப்பையும் பீதிக்குள்ளாக்கியுள்ள விடயம் தொடர்பில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திணைக்களங்கள் இன்னமும் அசமந்தமாகவே இருக்கின்றன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கடந்த வாரம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தமை சிந்திக்கப்பட வேண்டிதாகவே உள்ளது. 

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுற்றி 273 கடல் மைல் தூரம் உள்ளது அதேநேரம் இந்த 273 கடல் மைல் தூரத்தினைப் பாதுகாக்க அல்லது கண்காணிக்க என்னும் பெயரில் 93 முகாம்கள் அல்லது நிலையங்களில் கடற்படையினர் உள்ளனர். அதாவது 3 கடல்மைல் தூரத்துற்கு ஒரு இடம் உள்ளது. அதனையும் தாண்டி எவ்வாறு இந்த போதைப் பொருள்கள் சர்வ சாதாரணமாக எடுத்து வரப்படுகின்றன என்பதற்கும்  இன்றுவரை  விடைகாண முடியவில்லை. 
TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image