Home » அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழுவினரை வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்துள்ளார் 

அமெரிக்காவின் உயர்மட்ட தூதுக்குழுவினரை வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்துள்ளார் 

Source
Share Button

இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளை வெளிவிவகார செயலாளர் அருனி விஜேவர்தன சந்தித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களங்கள் சார்பாக இலங்கை வந்துள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் வெளிவிவகாரச் செயலாளர் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுகளையும் வெளிவிவகாரச் செயலாளர் அருனி விஜேவர்தன பாராட்டி பேசியுள்ளார். இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image