ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாளைய தினம் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதே அவரது இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், பசில் ராஜபக்சவின் வருகையின் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
N.S