அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டத்தை கடுமையாக்க திட்டம்

அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டத்தை கடுமையாக்குவதற்கு, அந்த நாட்டு செனட் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி தொடர்பான சட்டத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கடந்த தினம் அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
