அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்திற்கான உதவிச் செயலாளர் இலங்கை வருகை

அமெரிக்க திறைசேரியின் ஆசிய பிராந்தியத்திற்கான உதவிச் செயலாளர் ரோபெட் கப்றோத் இலங்கை வந்துள்ளார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் நேர்ககுடன் அவரது விஜயம் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சாங் தனது ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் பொருளாதார நிபுணர்களையும் சந்தித்து ரோபெட் கப்றோத் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
