அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதிநிதியாக இவர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை ருவண்டாவின் தலைநகர் கிகாலியில் இடம்பெறவுள்ளது. நாடுகளுக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புதல், இணைப்பை ஏற்படுத்தல், புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் மொழிபெயர்ப்பு என்ற தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறுகிறது. மாநாட்டைத் தவிர, ஐரோப்பிய, ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் பலவற்றின் அரச தலைவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.
