கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அரசாங்கத்தின் வரி வருமானம் பாரிய அதிகரிப்பைக் காட்டுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க நிதி முகாமைத்துவத்தை மிகவும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக அரசாங்க வருமானத்தை அதிகரிப்பது அவசியமாகும். நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதமாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்ளும் நோக்குடன் உரிய நிறுவனங்களுடன் தற்சமயம் வெற்றிகரமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார். இதன் முன்னெற்றங்கள் பற்றி ஜனாதிபதி அமைச்சரவைக்கு விளக்கமளித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.