Home » அரசாங்கத்திற்கு சொந்தமான சகல நிறுவனங்கள் தொடர்பான ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு சொந்தமான சகல நிறுவனங்கள் தொடர்பான ஆவணம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

Source
Share Button

சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில், தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவிற்கு எந்தத் தரப்பிற்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. மாணவர் சமூகத்தின் கல்விசார்ந்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து உரையாற்றினார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகிறது.

நாட்டின் பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வருவதாக விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பணவீக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நியச் செலாவணியும் நாட்டுக்குக் கிடைத்து வருகிறது. குறுகிய நோக்கங்களுக்காக சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், சங்கைக்குரிய சிறிதம்ம தேரர், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு முதலிகே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாட்டில் தற்சமயம் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், மருந்துகளின் விலை அதிகரித்தமையினாலும் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கர்ப்பிணித் தாய்மார் தற்போதைய நிலையினால், பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். அரசாங்கம் இதுபற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான சகல நிறுவனங்கள் பற்றிய ஆவணத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.

உள்நாட்டு உற்பத்தியை பாதுகாப்பதற்காகவே செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அறவிடப்படும் நிதி உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்றும் விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய கூறினார்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றமையினால், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார். மக்கள் புதிய அரசாங்கத்தை எதிர்பார்த்துள்ளார்கள். பாடசாலை உபகரணங்களின் விலை மூன்று மடங்கினால் அதிகரித்துள்ளமையினால், அதனை குறைக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image