அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் உரையாற்றினார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாதுகாப்பான ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதாகும். இது தவிர, வேறு வழிகள் இல்லை என்றும் அவர் கூறினார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியிருப்பதாகவும், இலங்கைக்கு மேலதிக கடன்களை வழங்குவது பற்றி கலந்துரையாடுவதற்கென மூன்று இந்திய அதிகாரிகள் இலங்கை வரவிருப்பதாகவும் கூறினார்.
