அரசாங்க வருமானம், ஜனவரி மாதம் முதல் மாதந்த செலவைவிட குறைந்தளவில் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் செலவினத்தை மேலும் குறைப்பது அவசியம் என்றம் அவர் வலியுறுத்தியுள்ளார். அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, நலன்புரி விடயங்கள், மருந்து இறக்குமதி, கடன் செலுத்தல் போன்ற செலவுகளைத்தவிர திறைசேரிக்கு ஏணைய செலவுகளை பொறுப்பேற்க முடியாத நிலை காணப்படுகிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வரி திருத்தங்களின் மூலம் திரட்டுவதற்கு எதிர்பார்த்துள்ள வருமானங்கள் கிடைக்கும் வரை அரசாங்கத்தின் செலவுகளை மேலும் குறைக்க நேரிடும் என்றும் அவர் கூறினார். ஆனால், சிறு செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி வரையறுக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.