Home » அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று பாராளுமுன்றத்தில் ஆரம்பமானது

அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்று பாராளுமுன்றத்தில் ஆரம்பமானது

Source
Share Button

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தி, பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரத்தை வழங்க முடியும். இதன்மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதாக விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர் நிமல் சிறிபா டீ சில்வா தெரிவித்தார். தேர்தல் முறைமை பற்றி மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கருத்து சாத்தியமான நடவடிக்கை என்று அவர் கூறினார். அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலம் சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்திச் சர்வதேசத்தின் அங்கீரகாரத்தைப் பெற எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அரசியலமைப்ப சபையானது அரசியல் மயப்படாது செயற்படுவது அவசியம் என்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலமைப்பு மறுசீரமைப்பு மாத்திரம் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டு மக்களுக்கு விவசாய உரத்தினை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட பிரச்சினைகளைக்குத் தீர்வு அவசியம். இதேவேளை, மோசடியான நிறுவனங்களை கணக்காய்வு செய்வதற்கான சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பின் நோக்கம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் தெளிவான மாற்றத்தினை அடையக் கூடியதாக அமைய வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுக்களுக்கு பொருத்தமான நபர்களை நியமிக்க வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தககே தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிடின் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார். அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலம் ஒவ்வொருவரின் இலக்குகளை அடைய முயற்சிக்காது, மக்களின் நலனுக்காகவும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவும் அந்த செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பு பலப்படுத்தப்பட்டதாக விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறினார். எனினும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்;பட்டதனால், ஏற்பட்ட பாதிப்புகளை கடந்த காலத்தில் அனுபவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அதனால் அரசியலமைப்பு சபையின் அதிகாரம் பலமிழந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image