அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்ட அதிகாரங்களை முதலில் அமுல்படுத்த வேண்டும் – இரா.துரைரெத்தினம்
முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப் படாமல் உள்ளது. இதற்கு அரசும், சில அரசியற் கட்சிகளும் காரணமாகும். 3ஆவது திருத்தச்சட்ட அதிகாரங்களை முதலில் அரசு அமுல்படுத்த வேண்டும் என மு.கிழக்கு மாகாண சபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக அன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு 1987ம்ஆண்டு இந்திய அரசு தனது நலன் பாதிக்கப்படாமல் இலங்கை அரசின் நல்லினக்கத்துடனும் முழு இலங்கையிலும் 13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக மாகாணசபை முறமை அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றைய சூழ்நிலையில் இவ்விடயம் தொடர்பாக விரும்பியோ. விரும்பாமலோ குறிப்பிட்ட சாரார் இதை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைக்காமல் மறைமுகமாக பல மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இன்றுள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரையில் தமிழர்களாகிய நாம் பலவீனம் அடைந்த நிலையில் வலு இழந்து நிற்கின்றோம். இத்தருணத்தில் எமக்காக ஒரு நாடு முப்பது வருடங்களுக்கு முன்பு முன் வைத்த மாகாணசபை முறமையை அமுல்படுத்துங்கள் என ஜக்கியநாட்டுச் சபையில் கடந்த மாதம் குரல் கொடுத்து பேசும் போது தமிழர்களாகிய நாங்கள் மௌனம் காக்க முடியாது உள்ளதையும் இருப்பதையும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டதையும் இல்லாமலாக்குவதற்கு இனவாத அரசு கங்கணம் கட்டுகின்ற இந் நிலையில் தமிழர்களாகிய நாம் ஒன்று பட்டு கலந்துரையாடி மாகாணசபை முறமையை அமுல்படுத்துமாறு அனைத்து தமிழ் தரப்புகளும் ஒருமித்த குரலில் இலங்கை அரசிடம் கோரிக்கை முன் வைத்தது என்பது தமிழர்களின் ஒற்றுமையை புடம் போட்டு காட்டுகின்றது.
வலியை உணர்ந்தவர்களாக செயல்வடிவம் கொடுத்துள்ளோம். பொது விடயத்திற்காக தமிழ் தரப்பு ஒன்று சேருவோம் என தொண்ணுத்தொன்பது வீதம் வெளிக்காட்டி உள்ளது. தமிழர்கள் தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையிலும் சிறந்தவர்கள் என உறுதிப்படுத்தி உள்ளது. இது வளர்ச்சி பெற தமிழ்த் தலைமைகள் செயல்படும். நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்த்தலைமைகள் செயற்படும் என்பது வரலாறாகும்.
இத் திட்டங்களில் இருந்து அரசு பின் வாங்காமல் இருப்பதற்கும், அமுல்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தை நல்லிணக்கத்தோடு கொண்டு செல்வதற்கும் இந்தியாவின் அணுசரணையை இந்தியா ஜக்கிய நாட்டுச் சபையில் வெளிக்காட்டி உள்ளதை தமிழ்த்தலைமைகள் பயன்படுத்திக் கொண்டு இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது அணுசரணை தேவைப்படும் பட்சத்தில் இலங்கை அரசும், இந்திய அரசும், தமிழ்த் தலைமைகளும் இந்தியாவின் அணுசரணையை நாடுவது காலத்தின் தேவையாகும்.
AR