அரசியல் அமைப்பின் மீதான 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமர்ப்பிக்கபட்டிருந்த மனுக்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது

அரசியல் அமைப்பின் மீதான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இருக்குமாயின் அவற்றை இன்று சமரப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றது. திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டிருந்த 9 மனுக்களை நேற்று உயர்நீதிமன்றம் ஆராய்ந்தது. இந்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனு பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு விரைவில் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
