நாம் இந்தியாவின் கலாச்சாரத்தை ஒத்தவர்கள் என்பதனால் அவரை நாடி நிற்பதற்கு சீனா அஞ்ச வேண்டிய தேவை கிடையாது என சீனத் துணைத் தூதுவரிடம் யாழ்ப்பாணம் பிரதிநிதிகள் எடுத்துரைப்பு.
யாழ்ப்பாணத்துற்கு நேற்று மாலை வந்த சீனாவின் துணைத் தூதுவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுபேர் நேற்று இரவு ஓர் விடுதியில் சந்தித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இதேநேரம் போரின்போது பாதிக்கப்பட்ட தரப்புடன் அன்றி பாதிப்பை ஏற்படுத்திய தரப்புடனேயே சீனா நின்றமை வருத்தமளிக்கின்றது.

இதேநேரம் இறுதிப் போரின்போது சீனா மட்டுமல்ல இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் அரசிற்கு உதவியமையும் எமக்குத் தெரியும் ஆனால் அவர்கள் தற்போதேனும் மாற்றிக்கொண்டாலும் சீனா இன்றுவரை அதனை மாற்றவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ தயார் இல்லை. இதேநேரம் எமக்காக குரல் கொடுக்க முடியாது நாம் அரசிற்கு அரசு என்கின்ற ரீதியில்தான் செயல்பட முடியும் எனத் தெரிவித்தால் தற்போது இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் ஓர் பேச்சு வார்த்தை ஏற்பாடு இடம்பெறுகின்றது. அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்றாவது ஓர் அறிக்கையை சீனாவால் வெளியிட முடியுமா எனக் கேட்டபோதும் சீன அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

வடக்கிற்கு பயணித்துள்ள சீனத் தூதரக அதிகாரிகள் முதலில் மன்னாரில் அமையவுள்ள ரஜமகா விகாரையின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லையும் இலங்கைக்கான சீனத் தூதுவர் நேற்றைய தினம் நாட்டி வைத்தார்.
வடக்கிற்கு இரு நாள் பயணமாக வருகை தந்துள்ள சீனக் குழுவினர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்கின்றனர்.
இதற்கமைய நேற்றைய தினம் மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் 300 குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவியை வழங்கி வைத்து உரையாற்றினார்.

இதனையடுத்து மன்னார் ஆகாஸ் விடுதியில் மதிய உணவுடன்கூடிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து மன்னார் மாதோட்டப் பகுதியில் ரஜமகா விகாரை சீனாவின் நிதியில் அமைக்க அத்திவாரம் இடும் நிகழ்வு விகாராதிபதியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின்போதும் 150 குடும்பங்களிற்கு உதவிப்பொதி வழங்கப்பட்டது.
மன்னார் நிகழ்வுகளையடுத்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த சீனக் குழுவினர் யாழ்ப்பாணம் கோட்டைக்கு பயணித்து கோட்டையை பார்வையிட்டனர்.
இதனையடுத்து இரவு உணவுடன் யாழ் விடுதியில் ஓர் சந்திப்பும் இடம்பெற்றது.
TL