அரச ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது

அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றி கலந்துரையாடப்படவில்லை என்று அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரச சேவையில் சமநிலையை ஏற்படுத்துவது பற்றி மாத்திரமே கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார். அரச சேவைக்கான ஆட்சேர்ப்புப் பற்றி மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. பிரதமரின் செயலாளர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார். அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் பற்றி முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.
தென்கொரியாவின் வால்டின் உட்பட பல்வேறு துறைகளுக்கான தொழில்வாய்ப்புக்கள் நிலவுவதாக அங்கு உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். இதற்கு கொரிய மொழித் தேர்ச்சி இன்றி விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது. இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த 45 வயதிற்குக் குறைந்தவர்களுக்கு இந்தத் தொழிலுக்காக விண்ணப்பிக்க முடியும் என்று ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கூறினார்.
