அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60ஆக வரையறுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

சகல அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதை சட்டபூர்வமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது அமுலுக்கு வரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
