அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது – அமைச்சின் செயலாளர் சரத் மாயாதுன்ன

அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சரத் மாயாதுன்ன தெரிவித்துள்ளார். இதற்கு அமைய அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இடமாற்றங்கள் அமுலுக்கு வரவிருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய கொரோனா வைரஸ் பரவலினால் அரச ஊழியர்களுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவில்லை என்று அமைச்சின் செயலாளர் கூறினார்.
