அரச ஊழியர்களின் வினைதத்திறன் பற்றிய ஆய்வு

அரச ஊழியர்களின் வினைத்திறன் தொடர்பில் பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் வினைத்திறனுக்கான பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையை மேலும் திறமையானதாக மாற்றுவது இதன் நோக்கமாகும். அரசு ஊழியர்கள் 365 நாட்களில் 191 நாட்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தொழில் முனைவோர் முக்கிய இடம் வகிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
