அரச சேவையில் கடமையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்கான பணிகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக தேசிய மற்றும் மாகாண பாடசலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.