அரச சேவை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் அமைப்புச் சபையின் சிபார்சிற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை உத்தியோகத்தரான சனத் ஜயந்த எதிரிவீர ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.சித்தி மரினா மொஹமட், நரசிங்ஹ ஹேரத் முதியன்சலாகே சித்திரானந்த, பேராசிரியர் நாகநாதன் செல்வகுமாரன், ரோஹன புஷ்பகுமார, கலாநிதி அங்கம்பொடி தமித்தா நந்தனி டி சொய்ஸா, ரஞ்சனி நடராஜபிள்ளை, சந்ரரத்ன பள்ளேகம ஆகியோர் உறுப்பினர்களாவர்.