அரச சேவை நாளை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளது

அரச ஊழியர்களை பகுதி அளவில் சேவைக்கு அழைக்கும் நடவடிக்கை இன்று முடிவடைவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இதற்கு அமைய நாளை தொடக்கம் சகல அரச ஊழியர்களும் வாராந்த ஐந்து நாள் சேவைக்கு சமூகமளிப்பது கட்டயமானதாகும். அரச ஊயழிர்களை பகுதி அளவில் சேவைக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்றுடன் ரத்துச் செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அரச சேவை நாளை தொடக்கம் வழமையான முiயில் இயங்க இருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவல், நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி என்பனவற்றினால் அரச அலுவலகங்களின் சேவைகள் கடந்த காலப்பகுதியில் வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
