Home » அரச சேவை பற்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை 

அரச சேவை பற்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை 

Source
Share Button

குறைந்த காலத்தில் தரமான அரச சேவையினை வழங்கல் மற்றும் திருப்திகரமான சேவையினை மேம்படுத்துவதற்கும் அரச சேவை பற்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஓரு சேவையினை மாத்திரம் வழங்கும் அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும். தலைநகரிலுள்ள பிரதான அரச நிறுவனங்களின் சேவைகளை மாகாண ரீதியிலும் விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் மக்கள் சேவை பெறுவதற்காக கொழும்பிற்கு வருகை தருவதை குறைக்க முடியும். பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் பொறுப்புகள் மற்றும் வீட்டுத்தோட்ட செய்கை பற்றி கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிதி இந்த விடயங்களை தெரிவித்தார் .

ஒன்றாக இணைந்து பயிரிடுவோம் நாட்டை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளிலான தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அந்தத் பிரதேசங்களில் பயிரிடுவதற்கான பயிர்களை இனங்காண வேண்டும். இதில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். நவீன தொழில்நுட்பங்களை இந்த வேலைத்திட்டத்தில் உட்படுத்துவது சிறந்தது என்றும் இந்தக் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image