அரச துறையில் நிலவிய தன்னிச்சையான செயற்பாடுகளே நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்

அரச பொறிமுறையில் காணப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி முகாமைத்துவம் கடந்த காலத்தில் மோசமான நிலையில் காணப்பட்டது. நாட்டின் பொருளாதார பின்னடைவிற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது. மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன வலியுறுத்தினார்.
