அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

அரச தொழில் முயற்சிகளை மறு சீரமைக்கும் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் இது இயங்குகிறது. திறைசேரியின் மீதான நிதிச் சுமைகளை குறைப்பதற்கான வழிகளை இனங்கண்டு அரச தொழில் முயற்சிகளில் வினைத்திறனை மேம்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும். நீண்ட காலமாக நஷ்டத்தை எதிர்நோக்கும் அரச நிறுவனங்களினால் திறைசேரிக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிறுவனங்களை வினைதிறனான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான மாற்றுப் பொறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்; என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை, அரச-தனியார் நிறுவனங்கள் இணைந்து தேசிய முகவர் நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை தீர்ப்பதற்கான யோசனைகளை சமர்ப்பிப்பது இதன் பணியாகும். இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.
அரச நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும்; கட்டடப்பொருட்கள் தொடர்பான மேற்பார்வை பணிகளுக்கென குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஒழுங்குறுத்தல் நாயகம் ரம்மியா காந்தி இதற்கு தலமை தாங்குகிறார்.
