அரச நிதி முகாமைத்துவத்தை முறையான விதத்தில் விரிவுபடுத்துவது பற்றி நிதியமைச்சின் செயலாளர் அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார். அடுத்த மாதத்தில் வரி மற்றும் வரியல்லாத வருமான எதிர்பார்ப்பு 17 ஆயிரத்து 300 கோடி ரூபாவாகும். சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு, நிவாரணங்கள் என்பனவற்றுக்கென 19 ஆயிரத்து 600 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.