அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் முன் அனுமதி பெறுவதற்கான குழு நியமனம்

அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளுக்கான புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
குழுவின் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க செயற்படவுள்ளார். பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் அமைச்சரவை செயலாளர் று.ஆ.னு.து. பிரனாந்து ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச நிறுவனங்களின் பிரதான பதவிகளை மாற்றுவதற்கு தேவைப்படுமாயின், நியாயமான காரணங்களுடன் உரிய குழுவிடம் பரிந்துரைகளை சமர்ப்பித்து, முன் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன் அனுமதி இன்றி, உரிய நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் பதவிகளை மாற்றுவதற்கு அவ்வப்போது ஜனாதிபதியிடமிருந்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவற்றையும், சில முறையற்ற நியமனங்களை கவனத்திற் கொண்டும், இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
