அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்.

அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின், இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
