அரச வெசாக் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக, அதற்கு அனைத்து பௌத்த பக்தர்களின் ஆதரவையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெசாக் வாரம் நேற்று ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் எட்டாம் திங்கட்கிழமை வரை அனுஸ்டிக்கப்படும்.
வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக அரச மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
தேசிய வானொலியின் சுபாரதி நிகழ்சிசியில் இன்று பங்கேற்ற அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஆன்மீக அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்து வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.