அரிசி இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை

அரசி இறக்குமதியை நிறுத்துவதற்கு வர்த்தக அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறுபோக நெல் அறுவடையை விற்பனை செய்யும் இந்த சந்தர்ப்பத்தில் உள்நாட்டு அரிசிக்கு முக்கியத்துவம் அளிப்பது இதன் நோக்கமாகும். பெரும்போக நெற்செய்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு இம்முறை எட்டு இலட்சத்து 51 ஆயிரத்து 43 ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
