அரிசி கையிருப்பைப் பாதுகாக்கத் தேவையான வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன

நாட்டுக்குத் தேவையான அரிசிக் கையிருப்பை திட்டமிட்ட அடிப்படையில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் ஆலை உரிமையாளர்களுக்கு ஐந்து கோடி ரூபா பெறுமதியான கடன் உதவியும் வழங்கப்பட இருக்கின்றது. இந்த யோசனை மாவட்ட மட்டத்தில் அரிசியை உற்பத்தி செய்யும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக அமுற்படுத்தப்பட இருக்கின்றது. ஹிங்குரான்கொட, பொலநறுவை, வவுனியா, ஹகதவ ஆகிய பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் நவீனமயப்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கென, இரண்டு கோடி 50 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் பற்றிய முகாமைத்துவக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கென ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
