அவசரகாலச்சட்டம் பற்றிய பாராளுமன்ற விவாதம் இன்று

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் பற்றிய பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது. அவசரகால சட்டம் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது, அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சத்தியாப் பிரமாணம் செய்ததையடுத்து வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினரா இன்று சத்தியப்பரமானம் செய்யவுள்ளார்.
