ஆசிரியர் வெற்றிடங்களை வருட இறுதியில் பூர்த்திசெய்ய கல்வி அமைச்சு திட்டம்

இந்த வருட இறுதியில் சுமார் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் நடைபெறும் பரீட்சைகளின் பின்னர் இருபத்தி இரண்டாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது பாடசாலைகளில் சுமார் இருபத்தி இரண்டாயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.
நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியக் கொள்கையால் பத்தாயிரம் ஆசிரியர்கள் ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதற்கட்ட திட்டமாக இருபத்தி இரண்டாயிரம் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் இடம்;பெற உள்ளது.
தற்போது அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் மற்றும் அரச துறையில் பணிபுரியும் ஏனைய பட்டதாரிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நிதி நெருக்கடி காரணமாக பொதுத் துறையில் ஆட்சேர்ப்பை நிறுத்த அரசாங்கம் முன்பு முடிவு செய்தது. இந்த யோசனைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
