இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தக் காலப்பகுதியில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள மொத்தத் தொகை 18 கோடியே, 67 இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்து.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 45 கோடியே 40 லட்சம் டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 82.4 சதவீத அதிகரிப்பாகும்.
ஜனவரி மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பிய அந்நியசெலாவணி 42 கோடியே 75 லட்சம்;; அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.