ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரின்போது பயன்படுத்தப்பட்டு, வெடிக்காத நிலையில் இருந்த குண்டுகள் மற்றும் வெடிபொருட்களினால் கடந்த வருடத்தில் 700ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கைவிடப்பட்டிருந்த குண்டு ஒன்று கடந்த வாரம் வெடித்ததில் எட்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். அங்கு நிலவும் வறுமையினால் சிறுவர்கள் இரும்புகளை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதன்போது கைவிடப்பட்ட ஆயுதங்கள் வெடிப்பதனால் சிறுவர்கள் அதிகளவில் உயிரிழப்பதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் வறுமையினால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.