ஆப்கானிஸ்தானில் வெள்ளம் – இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர்

ஆப்கானிஸ்தானின் – பர்வான் மாகாணத்தில் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. வீதிகளில் வெள்ளம் நிரம்பி வழிவதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
