ஆயிரத்து 140 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக இதுவரை 50 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று தொடக்கம் ஞசு உழனந மூலம் பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுகிறது. ஆயிரத்து 140 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட 50 லட்சம் வாகனங்களில், 29 லட்சம் மோட்டார் சைக்கிள்களாகும். இதில் எட்டு லட்சத்து 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும், ஆறு லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களும் அடங்கும்
