Home » ஆறுகளுக்கு அருகில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது

ஆறுகளுக்கு அருகில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது

Source
Share Button

நாட்டில் எந்தவொரு ஆற்றிலும் வெள்ள நிலைமை ஏற்படவில்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆனால், மழையுடன் கூடிய காலநிலை தொடருமாயின், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார். இதனால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் என்பன வெளியிடும் அறிக்கைகள் பற்றி கவனம் செலுத்துமாறு அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்சமயம் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. ஆனால், உயர் நீரேந்து பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என்று எஸ்.பி.சி.சுகீஸ்வர எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image