ஆறு பிரதேச செயலாளர் அலுவலகங்களில் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது

டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். இத்திட்டம் தற்போது ஆறு பிரதேச செயலாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. சிங்களம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு முறைகளில் இந்த டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக பிறப்புச் சான்றிதழை மொழிமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது என அவர் தெரிவித்தார்.
