ஆறு மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜே.வி.பி தெரிவிப்பு

அரசியலுக்கு முன்னர் மக்கள் உயிர் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது முக்கியம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். போராட்டத்தின் ஊடாக மக்ககளின் மனங்களில் வைராக்கியத்தை ஏற்படுத்துவதை தவிhக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். சகலரும் இணைந்து தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது முக்கியம் என அவர் தெரிவித்தார்.
கடன் மறுசீரமைப்புக்கு முன்னர் அரச நிதி முகாமைத்துவம் மேற்கொள்ளளப்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரிச டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றம் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதர் ரணில் விக்கிரமசிஙக் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது கட்சி தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாற்பது வருட பொருளாதார பயணமே தற்போதைய நெருக்கடி நிலைக்க காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குஙிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தற்போதைய பிரச்சினைக்கு ஆறு மாதத்தில் தீர்வு காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
